இலங்கை அகலப்பட்டை தொழில்நுட்பத்தில் புரட்சி

குளோபல் பிராட்பேண்ட் இணைய வேகத்தில் இலங்கை 68 வது இடத்தை பிடித்துள்ளது.

அதற்கமைய இணைய நெறிமுறைகள் பதிப்பு 4ஆம் (IPv4) பிரிவில் இணையத்துடன் நொடியில் 8.5 மெகாபைட் (8.5 Mbps) வேகத்தில் இணைக்கூடிய இடத்தில் இலங்கை உள்ளது.

இது 21ஆம் நூற்றாண்டிற்கு பொருத்தமான தொழில்நுட்பத்தை தேடி செல்லும் பயணத்தில் இலங்கைக்கு கிடைத்த பாரிய வெற்றியாக கருதப்படுகின்றது.

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பிராந்தியத்தின் அக்கமாய் டெக்னாலஜிஸ் நிறுவத்தினால் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 89வது இடம் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

உலகில் வேகமான இணைய சேவையை வழங்கும் நாடுகளில் தென்கொரியா முதல் இடத்தை பிடித்துள்ளது. நொடியில் 28.6 மெகாபைட் (28.6 Mbps) வேகத்தில் இணைக்கூடிய இடத்தில் தென்கொரியா உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Related posts