சிங்கள அரசியல்வாதி VS தமிழ் அரசியல்வாதி – வெட்கக்கேட்டு ஒப்பீடு

இவர் ஒரு சிங்கள அமைச்சர். இவர் பெயர் தெவரப் பெருமா. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவர் உதவி வருகிறார்.

இவருடைய கைகள் தனது வேட்டியை தூக்கிப் பிடிக்க வில்லை. மாறாக மக்களுக்கு பொருட்களை தூக்கி செல்கிறது.

இவருக்கும் பல மெய் பாதுகாவலாகள்; உண்டு. ஆனால் அவர்களை தனக்கு குடை பிடித்து வருமாறு இவர் பணிக்கவில்லை.

இவர் விரும்பியிருந்தால் மக்களை பார்வையிட்டுவிட்டு ஹோட்லில் சென்று உணவு அருந்தியிருக்கலாம். ஆனால் அவரோ வீதியில் வைத்து பார்சல் சாப்பாடு சாப்பிடுகிறார்.

இவர் அமைச்சர் என்பதால் அரசுக்கு நல்ல பெயர் வாங்குவதற்கு நடிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

சரி. இதோ ஜே.வி.பி தலைவர் அனுரா குமார. இவர் எதிர்க்கட்சிதானே. இவர் விரும்பியிருந்தால் அரசை சாடி ஒரு அறிக்கை கொடுத்துவிட்டு வீட்டில் இருந்திருக்கலாம்தானே.

ஆனால் இவரோ தனது கட்சி செந்தாரகை அனர்த்த சேவைகள் படையணியுடன் நேரடியாக களத்தில் நின்று மக்களுக்கு உதவி புரிகின்றாரே.

தமிழ் தலைவர்கள் யுத்தம் மற்றும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டபோது எப்படி உதவுகிறார் என்றால் குடை பிடித்து தம் துணையின் கைகளை இறுக்கப் பிடித்து வலம் வருவது தான் வழமை.

நல்லவேளை தனக்கு குடை பிடிக்க ஒருவரை வைத்திருப்பதுபோல் தனது வேட்டியை தூக்கிக்கொண்டுவர ஒரு ஆளை வைத்திருக்கவில்லை என்று மட்டும் திருப்திப்பட வேண்டியிருக்கு.

இப்போது கூறுங்கள், தமிழ் மக்கள் இதை நினைத்து பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு வழியுண்டா?

Comments

comments

Related posts