கண்டி பேருந்தில் மாணவனின் இடுப்பை பதம் பார்த்த இளம் பெண்

பேருந்தில் தனது வலப்பகத்தில் அமர்ந்திருந்திருந்தவாறு பயணித்துக்கொண்டிருந்த 14 வயதான மாணவனின் இடது பக்க இடுப்பில் குத்தூசியால் குத்திப் பதம்பார்த்த பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட மாணவன், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்தப் பெண், கண்டி- தென்னக்கும்புர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவருகிறது. குத்தூசியால், மாணவனின் இடுப்பைப் பதம்பார்த்த அந்தப் பெண், பஸ்ஸிலிருந்து இறங்கியோடி தப்பிப்பதற்கு முயன்ற போதிலும், அப்பெண்ணை சுற்றிவளைத்த பயணிகள், அவரைப் பிடித்து, கண்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை, அந்த மாணவனின் கையிலும், குத்தூசிக் காயம் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. தன்னுடைய தாயுடன், கண்டியை நோக்கி தனியார் பஸ்ஸில், கடந்த திங்கட்கிழமையன்று பயணித்துகொண்டிருந்த போதே, இவ்வாறான அசாதாரண நிலைமைக்கு, அம்மாணவன் முகங்கொடுத்துள்ளார். இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட பெண் தொடர்பில், விசாரணைகளை கண்டி பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Source: importmirror

Comments

comments

Related posts