ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதியாம்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

இதற்கமைய, குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, ஞானசார தேரர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகையினால், இவ்வழக்கு விசாரணையை எதிர்வரும் 12ம் திகதி எடுத்துக்கொள்வதாக நீதிபதி தெரிவித்தார்.

கடந்த 24ம் திகதி மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதும், தேரர் நீதிமன்றத்துக்கு ஆஜராகாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது

Comments

comments

Related posts