வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 79 வயது பெண்ணை பலாத்கரிக்க முயன்ற நபர்

வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட வயோதிப பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முனைந்த நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

மல்வனை, மாபிட்டிகம பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 79 வயதுடைய பெண் ஒருவரை, நபர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு நடந்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மாபிட்டிகம பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர், அந்தப் பிரதேசத்தில் இருந்து தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த வயோதிப பெண்ணை, குறித்த நபர் ரம்புட்டான் தோட்டத்திற்கு இழுத்து சென்று துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார்.

எனினும் பெண்ணின் அலறல் குரல் கேட்டு, அந்த வழியால் வந்த வந்தவர்கள் காப்பாற்ற முனைந்த போது, சந்தேகநபர் தப்பி சென்றுள்ளார்.

சம்பவத்தை அறிந்த பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்தை சுற்றிவளைத்த போது சந்தேகநபர் வெள்ள நீரில் நீந்தி தப்பி சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

comments

Related posts