ஒட்டுமொத்த வடக்கு மக்கள் மீது நாட்டு மக்களின் சந்தேகப் பார்வை விழ சந்தர்ப்பம்

கிளிநொச்சி மக்களின் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் இயக்கச்சியில் பொதுச்சந்தை மற்றும் வர்த்தகத் தொகுதியொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

14.7 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இக்கட்டிடத் தொகுதியை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் திறந்து வைத்திருந்தார்.

பின்னர் அங்கு உரையாற்றிய விக்னேஸ்வரன், அண்மையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

குறித்த சம்பவம் மட்டுமன்றி வடக்கில் இடம்பெறும் அனைத்துக் குற்றச் செயல்களுடனும் தொடர்புடையவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் நாட்டு மக்களுக்கு அடையாளப்படுத்தப்பட வேண்டும்.

இல்லாது போனால் ஒட்டுமொத்த வடக்கு மக்கள் மீதும் நாட்டு மக்களின் சந்தேகப் பார்வை விழுவதற்கு சந்தர்ப்பம் அமைந்துவிடும்.

இதுகுறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டியது மத்திய அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.

Comments

comments

Related posts