சட்டத்தை மீறுவோரை அடக்கத் தவறிய பொலிஸார்: ஒத்துக்கொண்ட சட்டம், ஒழுங்கு அமைச்சர்

சட்டத்தை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க பொலிஸ் தவறிவிட்டது என்று சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க நாடாளுமன்றில் குற்றம்சாட்டினார்.

சிறுபான்மையின மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இனவாதச் செயற்பாடுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் சபையில் எழுப்பிய கேள்விக்கு எதிராகப் பதிலளிக்கையிலேயே பொலிஸ் துறைக்குப் பொறுப்பான சட்டம், ஒழுங்கு அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமானது. நாட்டில் அமைதியையும், சட்டத்தையும் நடைமுறைப்படுத்துவது பொலிஸாரின் கடமை. நாட்டின் அமைதிக்கு அச்சுறுத்தலாக அமையும் சம்பவங்களுக்கு எதிராகப் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அண்மைக்காலமாக நாட்டில் இடம்பெறும் சம்பவங்களில் சில இனவாதம் அல்லது மத வெறுப்புக் கொண்டவை அல்ல. அவை விபத்துக்கள் அல்லது குற்றச்செயல்கள்.

எனினும், முக்கிய சில பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படாததால், எல்லா சம்பவங்களும் இனவாத செயற்பாடுகளாக ஆக்கப்பட்டுள்ளன” – என்று அமைச்சர் சாகல மேலும் தெரிவித்தார்.

Comments

comments

Related posts