இலங்கை இனவாதம் தொடர்பில் இவ்வாறு அவுஸ்திரேலியாவில் கூறினார் மைத்திரி

நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இனவாதமாக செயற்படுகின்றனவர்களுக்கு எதிராக கடுமையானசட்ட நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன அவுஸ்திரேலியாவில் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டுப்பிரதமர் மெல்கம் டேன்புல்லை இன்று சந்தித்துள்ளார்.

இதன்போது இருநாட்டு இராஜதந்திர உறவுகள் மற்றும் பொருளாதார நிலைமைகள் உள்ளிட்டபல்வேறு விடயங்கள் தொடர்பில் இரு தலைவர்களும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அவுஸ்திரேலியாவில் இலங்கையர்களையும் ஜனாதிபதி சந்தித்துள்ளார்.

அவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி,அண்மைக்காலமாக அரசியல் ரீதியாக லாபம் தேடும் சில குழுக்கள், இனவாத செயற்பாடுகளில்ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான குழுக்களுக்கு எதிராக சட்டத்தை உரிய வகையில் அமுலாக்குமாறு உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், நாட்டின் அமைதியை சீர்குலைக்க எவருக்கும்இடமளிக்கப் போவதில்லை என்றும் அவுஸ்திரேலிய வாழ் இலங்கையர்களிடம் ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Comments

comments

Related posts