இனவாதிகளை ஒடுக்க பொலிஸ்மா அதிபருக்கு அரசாங்கம் விடுத்துள்ள உத்தரவு இது

இனங்களுக்கு இடையில் சமத்துவத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் வாழும் இனங்களுக்கு இடையில் சமத்துவத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறான சம்பவங்கள் மற்றும் நடத்தைகள் எதிர்காலத்தில் ஏற்படாது இருக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்கான அவசியம் குறித்தும் அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் அமைச்சரவையின் மூலம் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

நாட்டினுள் வாழும் இனங்களுக்கு இடையில் சமத்துவத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான சம்பவங்கள் தொடர்பில் பொறுப்புடைய பிரிவினருக்கு எதிராக, நடைமுறையிலுள்ள சட்டத்தின் கீழ் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், சட்டத்தினை அமுல்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கல்.

அவ்வாறான சம்பவங்கள் தமது அதிகார பிரதேசங்களில் ஏற்படாதிருக்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் படி அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல்.

முதலான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Comments

comments

Related posts