பிரித்தானியா மன்செஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஒருவர் கைது

பிரித்தானியாவின் மன்செஸ்டர் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 23 வயது மதிக்கத்தக்க ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் தெற்கு மன்செஸ்டரில் உள்ள சோல்ட்டன் (Chorlton) பகுதியில் வசித்து வருபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 10.33 மணியளவில் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் இதுவரை 22பேர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது 59பேர் காயமடைந்துள்ளதாக அண்மைய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலை நடத்தியவர் சம்பவத்தின் போது உயிரிழந்ததாகவும் அவர் தன்னிச்சையாகவே குறித்த தாக்குதலை நடத்தியுள்ளார் எனவும் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த தாக்குதலுக்கு வீட்டில் உருவாக்கப்பட்ட குண்டு ஒன்றே பயன்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த தாக்குதலில் உயிரிழந்த பலர் இன்னும் இனங்காணப்படாத நிலையில், 18 வயது நிரம்பிய ஜோர்ஜினா (Georgina Callander) எனும் பெண் இனங்காணப்பட்டுள்ளதாக…

Read More

பளை துப்பாக்கிச் சூட்டு பின்னணியில் தமிழகத்தில் தலைமறைவாக இருந்த விடுதலைப் புலிகள்

பளை பகுதியில் பொலிஸாரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருப்பதாக தேசிய சுதந்திர முன்னிணி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், யுத்தம் இடம்பெற்ற காலத்தில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தமிழகத்தில் தலைமறைவாக இருந்தனர். இந்நிலையில், அவர்கள் மீண்டும் தாயகம் திரும்பிய நிலையிலேயே கிளிநொச்சி பளை பகுதியில் பொலிஸாரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தின் மூலம் விடுதலைப் புலிகளின் மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டம் ஆரம்பமாகியுள்ளது என்ற செய்தி வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More

யாழ்.யுவதிக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த வாய்ப்பு!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி ஒருவருக்கு தாய்லாந்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் பங்குப்பற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாதனைப் படைத்த அனித்தா ஜெகதீஸ்வரனே குறித்த போட்டிக்கு தெரிவாகியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் கலந்துக் கொள்வதற்காக மேலும் இருவர் தெரிவாகியுள்ளனர். குறித்த மூவரும் முதல் தடவையாக சர்வதேச மெய்வல்லுநர் போட்டி ஒன்றில் கலந்துகொள்ள தெரிவாகியுள்ளனர். இவர்கள் மூவரும் வெளிநாடு செல்லவிருப்பதும் இதுவே முதல் தடவையாகும். தாய்லாந்தில் ஜூன் மாதம் 12ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ள தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுநர் போட்டிகளில் இம் மூவருடன் மேலும் ஐவர் பங்குபற்றவுள்ளனர். தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் கடந்த மாதம் நடைபெற்ற கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அனிதா, 3.45 மீற்றர் உயரம் பாய்ந்து இலங்கையில் சாதனையை நிலைநாட்டினார்….

Read More

பள்ளிவாசல் உண்டியல் உடைக்கப்பட்டு திருட்டு

ஏறாவூர் முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாசலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளதாகவும், உண்டியலில் இருந்த ஒரு தொகைப் பணம் திருடப்பட்டுள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பள்ளிவாசல் புனரமைப்பு மற்றும் நிருவாகப் பணிகளுக்கு நிதி சேகரிப்பதற்காக பள்ளிவாசலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலில் உள்ள பணமே இவ்வாறு திருட்டுப்போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாலை தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வந்தவர்களே இந்த விடயம் தொடர்பில் நிருவாகத்திற்கும் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Read More

உருகுணை பல்கலைக்கழகத்தில் பீடங்கள் கால வரையறையின்றி மூடப்பட்டது

உருகுணை பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் முகாமைத்துவ பீடங்கள் இன்று முதல் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரு மாணவ குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலே இதற்கான காரணம் என தெரியவந்துள்ளது.

Read More

கொழும்பு வாசிகளின் முக்கிய கவனத்திற்கு..!

கொழும்பின் சில பகுதிகளில் நாளை 18 மணிநேர நீர் விநியோகத்தடை ஏற்படும் என தேசிய நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அவசரமாக மேற்கொள்ள வேண்டிய திருத்த பணிகள் காரணமாக கொழும்பு 2 மற்றும் கொழும்பு 3 பகுதிகளில் நீர் விநியோகத்தடை ஏற்படுமெனவும், கொழும்பு 8, கொழும்பு 10 மற்றும் ஹெவலொக் பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

இலங்கை பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியை கடத்தி நிர்வாண புகைப்படம் எடுப்பு

பிர­பல தொலைக்­காட்சி ஒன்றின் பெண் நிகழ்ச்சித் தொகுப்­பாளர் ஒருவர் வெள்ளை வேனில் கடத்­தப்­பட்டு, நிர்­வா­ண­மாக்­கப்­பட்ட நிலையில் புகைப்­படம் எடுக்­கப்­பட்­டுள்­ள­துடன் அவ­ரது நகைகள் உள்­ளிட்­ட­வையும் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளன. இது தொடர்பில் மஹ­ர­கம பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்ட நிலையில் மஹ­ர­கம பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் டி.எஸ். மீடின் தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வினர் சிறப்பு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர். துப்­பாக்­கி­மு­னையில் கடத்தல் கடந்த வெள்­ளி­யன்று இரவு வேளையில் அலு­வ­ல­கத்தின் வேலை­களை முடித்­துக்­கொண்டு, மஹ­ர­கம, அருச்­ச­வல – ரத்­மல்­தெ­னிய பகு­தியில் உள்ள தனது வீட்­டுக்கு நிகழ்ச்சித் தாயா­ரிப்­பாளர் ஒரு­வரின் வாக­னத்தில் சென்­றுள்ளார். இதன் போது அந்த நிகழ்ச்சித் தொகுப்­பாளர் பங்­கேற்கும் நிகழ்ச்­சியின் தயா­ரிப்­பா­ளரும் அவ்­வா­க­னத்தில் சென்­றுள்ளார். இந்­நி­லையில் ரத்­மல்­தெ­னிய சந்­திக்கு 500 மீட்டர் தொலைவில் வைத்து திடீ­ரென வந்த வெள்ளை வேன் ஒன்றில் வந்­த­வர்கள் பெண் தொகுப்­பா­ள­ரையும் ஆண் தயா­ரிப்­பா­ள­ரையும்…

Read More

ஞானசார தேரரை நாய்போல் இழுத்து சிறையில் அடைக்க காலம் கனிவு – தயவு தாட்சண்யம் பாராமல் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு

இன்று அதிகாலை காவத்தை நகரில் தீயினால் இரண்டு கடைகள் சேதமானது, சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள், தனது அமைச்சில் பொதுபல சேனையினரின் நடவடிக்கை ஆகிய விவகாரங்கள் பற்றி தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், அமைச்சரவையின் கவனத்துக்கு இன்று கொண்டு வந்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சக அமைச்சர்கள் ஆகியோரது கவனத்துக்கு இவ்விடயங்களை கொண்டு வந்த அமைச்சர் மனோ கணேசன், தனது அமைச்சுக்குள் அல்லது எங்கேயும் எந்த ஒரு தீவிரவாத சக்திகள் வந்தாலும், தன்னால் அவர்களை எதிர்கொள்ள முடியும் என கூறினார். எனது அமைச்சுக்கு சிங்கமாக வந்த பொதுபல சேனை அதிபர் ஞானசார தேரர் பூனையாக திரும்பி போனார். ஆனால், சாதாரண மக்களின் நிலைமை…

Read More

நாவற்குழியில் சட்டவிரோதமாக கட்டப்படும் விகாரைக்குத் தடை!

நாவற்குழியில் புதிதாக தாதுகோபம் அமைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு சாவகச்சேரி பிரதேச சபையினால் எழுத்துமூலமான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி சட்டவிரோதமான கட்டிட வேலைகள் எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என்றும் பிரதேச சபை தெரிவித்துள்ளது. நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசத்துக்கு அண்மையாக விகாரை அமைக்கப்பட்டுள்ளது. விகாரைக்கான தாதுகோபம் அமைக்கும் பணி, இராணுவத்தினரால் அடிக்கல் நடப்பட்டு அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது. சாவகச்சேரி பிரதேச சபையில் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இது அமைந்துள்ளது. பிரதேச சபையின் அனுமதி பெற்றுக் கொள்ளப்படாமல், சட்டவிரோதமாக கட்டிடம் அமைக்க முற்பட்டமையினால், இந்த நடவடிக்கைகளை உடனடியாக இடை நிறுத்துமாறு சாவகச்சேரி பிரதேச சபை எழுத்துமூலமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதேவேளை, தென்மராட்சி பிரதேச செயலகத்தின் அனுமதி பெறப்பட்டே நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுவது தொடர்பில் பிரதேச செயலகத்திடம் கேட்டபோது…

Read More

மனோ கணேசன் நாகரிகமான முறையில் பேசுவதற்கு பழகிகொள்ள வேண்டும்! – சிவாஜிலிங்கம்

அமைச்சர் மனோ கணேசன் பொது பலசேனாவோடு தன்னை இணைத்து பேசியதற்கு வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தனது எதிர்ப்பு வெளியிட்டுள்ளதுடன் அமைச்சர் மனோ கணேசன் நாகரிகமான முறையில் பேசுவதற்கு பழகிகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சிவாஜிலிங்கம், ஞானசார தேரருடனான போன்றோர் எல்லாம் ஒரே மாதிரி செயல்படுபவர்கள் என்று அமைச்சர் மனோ கணேசன் கருத்துக்களை முன்வைத்துள்ளார். அமைச்சர் மனோ கணேசனுக்கு என்னுடைய செயற்பாடுகள் தொடர்பில் விமர்சிப்பதற்கு கருத்து, சுதந்திரம் உண்டு அதற்காக என்னை பொது பலசேனாவோடு ஒப்பிட்டு பேசுவதற்கு அமைச்சர் மனோ கணேசனுக்கு அருகதை கிடையாது. ஞானசார தேரருடன் கருத்து மோதல் என்றால் அவருடன் அமைச்சர் பேச வேண்டும். அதனை விடுத்து மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடக்கூடாது. அமைச்சர் மனோ…

Read More