வவுனியா வைரவபுளியங்குளம் விபத்தில் ஒருவர் படுகாயம்

வவுனியா, வைரவ புளியங்குளத்தில் இன்று மாலைஇடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குருமன்காட்டுப்பகுதியில் இருந்து வந்த பட்டா வாகனத்துடன் வவுனியா நகரில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிள் வைரவபுளியங்குளம், ஆதிவிநாயகர் ஆலயமருகில் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே படுகாயமடைந்துள்ளார். இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சன நெரிசல் மிக்க இப்பகுதியில் விபத்து ஏற்பட்ட நிலையில் காயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் வவுனியா பொது வைத்தயிசாலையில் அனுமதித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

comments

Related posts