மத வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் – பிரதமர் சீற்றத்தில் எடுத்த முடிவு

மத வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு தரப்புக்களுக்கு நேற்று உத்தரவிட்டுள்ளார்.

புதிய அமைச்சர் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர் பாதுகாப்பு துறைசார் உயர் அதிகாரிகளை அலரி மாளிகைக்கு அழைத்து பிரதமர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

முஸ்லிம் பள்ளிவாசல்கள் உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஏனைய மத வழிபாட்டுத் தளங்கள் மீதான தாக்குதல்கள் அழுத்தங்கள் மேற்கொள்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், எந்தவொரு காரணத்திற்காகவும் ஏனைய மதத் தலங்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதிக்க முடியாது என பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

Comments

comments

Related posts