பளையில் புகையிரதம் மோதி 28 வயதான தந்தை பலி

பளை கச்சார்வெளியில் அதிவேக புகையிரதம் மோதி இரண்டு பிள்ளைகளின் தந்தை நேற்று உயிரிழந்துள்ளார்.

புகையிரத கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்ட போதே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பில் பளை வைத்திய அதிகாரி சிவரூபன் தெரிவிக்கையில்,

புகையிரதத்தில் மோதி கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை முரளிதரன் எனும் 28 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.

இதன்போது, அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அவசர சிகிச்சை வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Related posts