நாவற்குழியில் சட்டவிரோதமாக கட்டப்படும் விகாரைக்குத் தடை!

நாவற்குழியில் புதிதாக தாதுகோபம் அமைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு சாவகச்சேரி பிரதேச சபையினால் எழுத்துமூலமான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி சட்டவிரோதமான கட்டிட வேலைகள் எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என்றும் பிரதேச சபை தெரிவித்துள்ளது.

நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசத்துக்கு அண்மையாக விகாரை அமைக்கப்பட்டுள்ளது. விகாரைக்கான தாதுகோபம் அமைக்கும் பணி, இராணுவத்தினரால் அடிக்கல் நடப்பட்டு அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது. சாவகச்சேரி பிரதேச சபையில் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இது அமைந்துள்ளது. பிரதேச சபையின் அனுமதி பெற்றுக் கொள்ளப்படாமல், சட்டவிரோதமாக கட்டிடம் அமைக்க முற்பட்டமையினால், இந்த நடவடிக்கைகளை உடனடியாக இடை நிறுத்துமாறு சாவகச்சேரி பிரதேச சபை எழுத்துமூலமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதேவேளை, தென்மராட்சி பிரதேச செயலகத்தின் அனுமதி பெறப்பட்டே நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுவது தொடர்பில் பிரதேச செயலகத்திடம் கேட்டபோது கட்டிட நிர்மாணத்துக்குரிய காணி தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமானது. நாம் இதற்கு அனுமதி வழங்க முடியாது என்று குறிப்பிட்டனர்.

Comments

comments

Related posts