நாளைமறுநாள் நாடு தழுவிய ஹர்த்தால் – முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்து

முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத தாக்குதலை கண்டித்து நாளைமறுநாள் வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் முஸ்லிம்கள் பூரண ஹர்த்தாலுக்கு தயாராகவுள்ளனர். இதன்பிரகாரம் நாடளாவிய ஹர்த்தாலுக்கு முஸ்லிம்கள் பங்கேற்குமாறு முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இரு வாரங்களாக முஸ்லிம்களுக்கு எதிராக பலதரப்பட்ட தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர். இது வரைக்கும் 21 சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. பள்ளிவாசல் மீதும் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீதும் தாக்குதல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனை கருத்திற்கொண்டு முஸ்லிம்கள் வியாழக்கிழமை அரச, தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள் நிர்வாகங்கள் மற்றும் வர்த்தகர்கள் தமது கடமையில் இருந்து விலகி நடக்குமாறு அவ்வமைப்பு கோரியுள்ளது.

Comments

comments

Related posts