திருநீறு, சந்தனம் பூசுவதில் ஏற்பட்ட மோதல் – யாழ் பல்கலை கழக மாணவர்கள் மூவருக்கு தடை

யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் மோத­லில் ஈடு­பட்ட கலைப்­பீட மாண­வர்­கள் 3 பேருக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தி னுள் நுழை­வ­தற்கு தடை­வி­திக்­கப்பட்­டுள்­ள­தாக யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழ­கத் துணை­வேந்­தர் இ.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் கலைப்­பீட மாண­வர்­க­ளுக்கு இடை­யில் நேற்றுச் சிறு மோதல் ஏற்­பட்­டது. யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழக முத­லாம் வருட மாண வர்­களைப் பல்­க­லைக்­கழகத்­துக்­குள் வேட்­டி­யுட­னேயே வர­வேண்­டும் என மூத்த மாண­வர்­கள் அறிவு றுத்தியுள்ளனர். அதன்படி முதலாம் வருட மாணவர்களும் வேட்டியுடன் பல்கலைக் கழகத்துக்குள் வருகை தந்துள்ளனர்.

புதுமுக மாணவர்களுக்கு மூன்றாம் வருட மாணவர்கள் திருநீறு, சந்தனம் பூச ஆயத்தமாகினர். அதற்கிடையில் இரண்டாம் வருட மாணவர்கள் முதலாம் வருட மாணவர்களுக்கு திருநீறு, சந்தனங்களைப் பூசிவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மூன்றாம் வருட மாணவர்கள் அங்கிருந்து விலகிச் சென்றனர்.

இதன் பின்னர் இரண்டாம் வருட மாணவர்களுக்கான ஆங்கில விரிவுரை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது வகுப்புக்குள் சென்ற மூன்றாம் வருட மாணவர்கள் சிலர் விரிவுரையில் இருந்த இரண்டாம் வருட மாணவர்களை சரமாரியாகத் தாக்கினர் என்று கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் இரண்டாம் வருட மாணவர்கள் ஐந்து பேர் சிறு காயங்களுக்குள்ளகினர். கபிலன் என்ற மாணவனுக்கு பொய்மூக்கு உடைந்ததுடன் முகத்திலும் சிறு காயம் ஏற்பட்டது. இதனால் குறித்த மாணவன் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

‘‘பகிடிவதை காரணமாக மோதல் ஏற்பட்டது என எனக்கு தகவல் வழங்கப்பட்டது. அதன் படி ஆரம்ப விசாரணைகளை நடத்திய பின்னர் மூன்று மாணவர்களுக்கு யாழ்ப்பான பல்கலைக்கழக வளாகத்துக்குள் உள்நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இடம்பெற்ற மோதல் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறவுள்ளன. விசாரணைகளின் பின்னரே மேலதிக தகவல்களை வழங்க முடியும்‘‘ என்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அ.விக்னேஸ்வரன்.

Comments

comments

Related posts