வேறு நபருடன் உறவில் இருக்கிறேன் என தெரிந்தும், என் கணவர் என்னை நேசிக்கிறார்! – உண்மைக் கதை

அபினவும் நானும் 2008-ல் முதன் முதலாக பார்த்துக் கொண்டோம். நாங்கள் இருவரும் 2012ல் திருமணம் செய்துக் கொண்டோம். எங்கள் காதல் வாழ்க்கை பயணம் சாதாரணமாகவோ, ஸ்மூதாகவோ செல்லவில்லை. ஆரம்பத்தில் நாங்கள் வெளியே சென்றோம். அபி போல ஒரு நல்ல நபரி இருப்பாரா என்ற வியப்பு எப்போதுமே எனக்கு இருந்தது. எல்லாருக்குமே அபியை பிடிக்கும். அவர் ஒரு ஜென்டில்மேன். நாங்கள் இருவரும் ஒருவர் மேல், ஒருவர் காதல் கொண்டிருந்தோம். இருவரும் வேரெதிர் துருவங்கள் தான். நான் பப்ளி, கேலி கிண்டல் செய்யும் ஆள். அவர் அதற்கு நேரெதிர். நான் எப்போதுமே அபியை மந்தமான நபர் என கூறுவேன். அபி என்னை உண்மையாக நேசிக்கிறார் என நான் அறிவேன். ஆனால், சினிமாவில் காண்பது போன்ற ரொமாண்டிக்கான விஷயங்கள் எதுவும் எங்கள் வாழ்வில் நடக்கவே இல்லை. நாங்கள் காதலிக்க ஆரம்பித்த ஒரே…

Read More

தின பலன் – 24 மே 2017

தின பலன் ராசி மேஷம் ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு ராசி ரிஷபம் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உதவிக் கேட்டு உறவினர், நண்பர்கள் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள் ராசி மிதுனம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மூத்த…

Read More

நாளைமறுநாள் நாடு தழுவிய ஹர்த்தால் – முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்து

முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத தாக்குதலை கண்டித்து நாளைமறுநாள் வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் முஸ்லிம்கள் பூரண ஹர்த்தாலுக்கு தயாராகவுள்ளனர். இதன்பிரகாரம் நாடளாவிய ஹர்த்தாலுக்கு முஸ்லிம்கள் பங்கேற்குமாறு முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இரு வாரங்களாக முஸ்லிம்களுக்கு எதிராக பலதரப்பட்ட தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர். இது வரைக்கும் 21 சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. பள்ளிவாசல் மீதும் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீதும் தாக்குதல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை கருத்திற்கொண்டு முஸ்லிம்கள் வியாழக்கிழமை அரச, தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள் நிர்வாகங்கள் மற்றும் வர்த்தகர்கள் தமது கடமையில் இருந்து விலகி நடக்குமாறு அவ்வமைப்பு கோரியுள்ளது.

Read More

திருநீறு, சந்தனம் பூசுவதில் ஏற்பட்ட மோதல் – யாழ் பல்கலை கழக மாணவர்கள் மூவருக்கு தடை

யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் மோத­லில் ஈடு­பட்ட கலைப்­பீட மாண­வர்­கள் 3 பேருக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தி னுள் நுழை­வ­தற்கு தடை­வி­திக்­கப்பட்­டுள்­ள­தாக யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழ­கத் துணை­வேந்­தர் இ.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் கலைப்­பீட மாண­வர்­க­ளுக்கு இடை­யில் நேற்றுச் சிறு மோதல் ஏற்­பட்­டது. யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழக முத­லாம் வருட மாண வர்­களைப் பல்­க­லைக்­கழகத்­துக்­குள் வேட்­டி­யுட­னேயே வர­வேண்­டும் என மூத்த மாண­வர்­கள் அறிவு றுத்தியுள்ளனர். அதன்படி முதலாம் வருட மாணவர்களும் வேட்டியுடன் பல்கலைக் கழகத்துக்குள் வருகை தந்துள்ளனர். புதுமுக மாணவர்களுக்கு மூன்றாம் வருட மாணவர்கள் திருநீறு, சந்தனம் பூச ஆயத்தமாகினர். அதற்கிடையில் இரண்டாம் வருட மாணவர்கள் முதலாம் வருட மாணவர்களுக்கு திருநீறு, சந்தனங்களைப் பூசிவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மூன்றாம் வருட மாணவர்கள் அங்கிருந்து விலகிச் சென்றனர். இதன் பின்னர் இரண்டாம் வருட மாணவர்களுக்கான ஆங்கில விரிவுரை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது வகுப்புக்குள் சென்ற மூன்றாம் வருட மாணவர்கள் சிலர்…

Read More

பொலீஸ் தலைமையகத்திலும் தமது ஆட்டத்தை ஆரம்பித்த பொதுபலசேனா

பொதுபல சேனா அமைப்பின் ஆதரவாளர்கள் தற்பொழுது பொலிஸ் தலைமையகத்தின் முன்னால் கூடியுள்ளனர். பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்வதாக தெரிவித்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இவ்வாறு கூடியுள்ளனர். வெள்ளை துணியினால் தமது வாயை மறைத்து அவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்ப்பிடத்தக்கது.

Read More

இலங்கை பாடசாலைகளுக்கு புதிய சுற்றுநிருபம்

பாடசாலைகளில் பொலித்தீன் பாவனையை தவிர்த்துக் கொள்ளுமாறு கல்வி அமைச்சு சகல பாடசாலை அதிபர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது. டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளதாகவும், இது தொடர்பில் பெற்றோரும் மாணவர்களும் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது. டெங்கு நுளம்புகள் பெருகாத வண்ணம் பாடசாலை சுற்றாடலை வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை முறையாக முன்னெடுப்பதற்கான விசேட அறிவுறுத்தல் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன், பாடசாலை மட்டத்தில் டெங்கு ஒழிப்பு பணிகளுக்காக விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

ரவி கருணாநாயக்க தொடர்பில் கவலைப்படுகிறார் மகிந்த

நிதியமைச்சராக செயற்பட்ட ரவி கருணாநாயக்க நேற்றைய தினம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இதனையடுத்து ரவி கருணாநாயக்கவுக்கு தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், மஹிந்த ராஜபக்ச கடுமையாக விமர்சித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்தில் பிரதான பாத்திரத்தில் இருக்கும் ரவி கருணாநாயக்கவை, வெளிவிவகார அமைச்சராக நியமித்தது பொருத்தமில்லை எனவும் மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார். இதேவேளை கூட்டு எதிர்க்கட்சியினர், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக சில மாதங்களுக்கு முன்னர் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

முஸ்லிம் சமூகம் நாட்டிற்கு எதிரானவர்களென்ற தோற்றப்பாட்டை இனவாதிகள் உருவாக்க முயற்சி

முஸ்லிம்கள் இந்த நாட்டிற்காக செய்த அர்ப்பணிப்புக்களுக்காக இன்று அவர்களுக்கு கிடைக்கும் பரிசு இனவாதத் தாக்குதல்களே என்பது வருத்தமளிக்கின்றது என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாட்டின் பொருளாதார துறை மாத்திரமன்றி அரசியல் மற்றும் அவசர நிலைமைகளிலும் மனிதாபிமான ரீதியில் செயற்பட்டு ஏனைய சமூகங்களுடனான உறவையும், மனிதாபிமானத்தையும் முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கே வெளிக்காட்டி நின்றுள்ளனர். ஆனால் இன்று முஸ்லிம் சமூகம் நாட்டிற்கு செய்த எல்லாவற்றையும் மறந்து நாம் இந்த நாட்டிற்கு எதிரானவர்கள் போன்றதொரு தோற்றப்பாட்டை இனவாதிகள் உருவாக்க முயல்கின்றனர். சிறுபான்மை சமூகங்கள் இந்த நாட்டிற்கு அச்சுறுத்தலானவர்கள் அல்ல என்பதை முதலில் பெரும்பான்மை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்…

Read More

பளையில் புகையிரதம் மோதி 28 வயதான தந்தை பலி

பளை கச்சார்வெளியில் அதிவேக புகையிரதம் மோதி இரண்டு பிள்ளைகளின் தந்தை நேற்று உயிரிழந்துள்ளார். புகையிரத கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்ட போதே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து தொடர்பில் பளை வைத்திய அதிகாரி சிவரூபன் தெரிவிக்கையில், புகையிரதத்தில் மோதி கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை முரளிதரன் எனும் 28 வயதான நபரே உயிரிழந்துள்ளார். இதன்போது, அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அவசர சிகிச்சை வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

வவுனியா வைரவபுளியங்குளம் விபத்தில் ஒருவர் படுகாயம்

வவுனியா, வைரவ புளியங்குளத்தில் இன்று மாலைஇடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குருமன்காட்டுப்பகுதியில் இருந்து வந்த பட்டா வாகனத்துடன் வவுனியா நகரில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிள் வைரவபுளியங்குளம், ஆதிவிநாயகர் ஆலயமருகில் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே படுகாயமடைந்துள்ளார். இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சன நெரிசல் மிக்க இப்பகுதியில் விபத்து ஏற்பட்ட நிலையில் காயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் வவுனியா பொது வைத்தயிசாலையில் அனுமதித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More