ஜனாதிபதி விக்னேஸ்வரன் சந்திப்பு – வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பிலும் ஆராய்வு

வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

தாம் அண்மையில் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் ஒன்று தொடர்பில் பதில் வழங்கும் நோக்கிலேயே இந்த சந்திப்பை ஜனாதிபதி ஏற்பாடு செய்திருந்ததாக சீவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டோர், காணிகள், வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக சீ வி விக்னேஸ்வரனால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் நிறுவாதிருக்க காரணம் சில சட்ட திருத்தங்களே, எனவும் அது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் வியேதாச ராஜபக்ஷ இதன்போது உறுதி மொழியளித்ததாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, காணி விடுவிப்பில் இராணுவத்தினருக்கு தேவையான காணிகளை தவிர்ந்து ஏனையவற்றை விடுவிக்கவுள்ளதாகவும், பாதுகாப்பு செயலாளர் உறுதியளித்துள்ளார் எனவும் சீவி விக்னேஸ்வரனால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

comments

Related posts

Leave a Comment