வைகாசி தமிழ் மாத ராசி பலன் – கன்னி

கன்னி :

சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் குல தெய்வக் கோயிலுக்குச் சென்று வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள்.

செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு மனை வாங்கி விற்கும் தொழில் மேன்மை உண்டாகும் 12ம் தேதிக்குப் பிறகு இயந்திரத் தொழில் சிறப்படையும். உங்கள் ராசிநாதன் புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளைத் தவிர்க்கவும் 20ம் தேதிக்குப் பிறகு தொழில் வியாபாரம் காரணமாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.

குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும் பொருளாதார நிலை சிறப்படையும். சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும் 17ம் தேதிக்குப் பிறகு பெண்களால் தொல்லை உண்டாகும்.

சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு வாங்கும் யோகம் உண்டாகும் வாகனங்களை பராமரிப்பு செய்வீர்கள். ராகு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும்.

Comments

comments

Related posts

Leave a Comment