யாழ்ப்பாணம் நாவற்குழியில் புதிதாக முளைக்கும் பௌத்த விகாரை

யாழ்ப்பாணம்- நாவற்குழியில் சிங்கள மக்கள் குடியமர்ந்துள்ள பகுதியில், பாரிய பௌத்த விகாரை ஒன்றுக்கான தூபிக்கு இராணுவத்தினரால் நேற்று அடிக்கல், நாட்டப்பட்டுள்ளது. சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவற்குழிப் பிரதேசத்தில், சிங்கள மக்கள் அத்துமீறிக் குடியமர்ந்துள்ளனர் என எதிர்ப்பு தெரிவிக்கப்படும் நிலையில், பாரிய தூபி ஒன்று அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இராணுவத்தினர், பௌத்த பிக்குகள், சிங்கள மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments

comments

Related posts

Leave a Comment