சகல பாடசாலை அதிபர்களையும் கொழும்புக்கு வருமாறு அழைப்பு

நாடு முழுவதும் உள்ள பாடசாலை அதிபர்களை கொழும்புக்கு வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 24ஆம் திகதி பாடசாலை அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாடசாலை அதிபர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டுவருவதால் தமது அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆராய்வதற்காகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு நியமனம் பெற்ற 4,200 அதிபர்களுக்கு 2015 ஆம் ஆண்டு பதவியுயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

எனினும், இதுவரை அது நடைபெறவில்லை. அத்துடன், மேலும் மூவாயிரம் அதிபர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நியமனங்களும் நடைபெறவில்லை.

இதன் காரணமாக அவர்களது சம்பளங்களில் பெரும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

எனவே, இந்த பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து தமது அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி தீர்மானிப்பதற்காகவே நாடு முழுவதும் உள்ள பாடசாலை சுமார் 11 ஆயிரம் அதிபர்களை எதிர்வரும் 24ஆம் திகதி கொழும்புக்கு அழைத்திருப்பதாக ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Comments

comments

Related posts

Leave a Comment