இலங்கையை வடகொரியாவாக இனங்காட்டிய அமெரிக்கர்கள்

வடகொரியாவால் அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏவுகணைச் சோதனைகள், அச்சுறுத்தல்கள் ஆகியன காரணமாக, வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையில், முறுகல் நிலை தோன்றியுள்ளது. அணுசக்திப் பலத்தைக் கொண்ட வடகொரியா மீது, இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென, சில அமெரிக்கர்கள் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவிலுள்ள 1,746 பேரிடம், உலக வரைபடத்தில், வடகொரியாவைக் காட்டுமாறு கோரப்பட்டது. அப்போது 4 அமெரிக்கர்கள், இலங்கையை, வடகொரியா என்று அடையாளம் காட்டியுள்ளனர். இலங்கை தவிர, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், மியான்மார், ஆப்கானிஸ்தான், ஈரான், துர்க்மெனிஸ்தான், கிர்ஜிஸ்தான், கஸக்ஸ்தான், லாவோஸ், வியட்நாம், தாய்லாந்து, கம்போடியா, சீனா, அவுஸ்திரேலியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, மொங்கோலியா, பப்புவா நியூ கினி, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளையும், அமெரிக்கர்கள் காட்டியுள்ளனர்.

வெறுமனே 36 சதவீதத்தினர் மாத்திரமே, வடகொரியாவைச் சரியாக அடையாளங்காட்டியுள்ளனர். வடகொரியாவை அடையாளங்காட்டக் கூடியவர்கள், இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு அதிக ஆர்வத்தை வெளிப்படுத்தினர். வடகொரியாவை இனங்காண முடியாதவர்கள், இராணுவ நடவடிக்கைக்கு, அதிக ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

Comments

comments

Related posts

Leave a Comment