வவுனியாவில் ஆறு மாத குழந்தையின் தாய் தூக்கில் தொங்கி தற்கொலை

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பப் பெண்ணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா நெளுக்குளம், புதையல்பிட்டியில் வசித்து வந்த ஆறு மாத குழந்தையின் தாயான சுதன் வாணி (வயது 24) என்பவரே உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

உயிரிழந்த பெண்ணின் கணவன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்று வீட்டிற்கு திரும்பும் போது குழந்தை தொட்டிலில் அழுது கொண்டிருந்துள்ளது.

இதன்போது குறித்த பெண்ணின் கணவர் குழந்தையை தூக்கி கொண்டு தாயை தேடிய போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸாரும், வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Related posts

Leave a Comment