மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் மனதை உருக்கும் பதிவு

கேட்டி லெஷோ என்னும் அவரின் அந்த பதிவு இரண்டு லட்சத்து முப்பத்து ஐந்து முறை பகிரப்பட்டுள்ளது; ஒரு வாரத்தில் முதல்முறையாக தனது தலைமுடியை சீவுவதாகவும், பல் துலக்குவதாகவும், அது மிகுந்த வலியை தருவதாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“மன அழுத்தம் ரசிக்கக்கூடிய ஒன்றல்ல” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

“மன அழுத்தம் கெட்ட பழக்கங்களை உருவாக்கும், கண்ணில் கண்ணீர் வற்றும் வரை அது அழ வைக்கும், கண் இமைகள் இமைக்க மறந்து கண்களில் எரிச்சல் வரும் வரை கூரையை உற்று நோக்க வைக்கும்.”

“உங்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தம் உங்கள் குடும்பத்தையும் அழ வைக்கும்; தனித்தும், கவனம் சிதறியவாறும் இருப்பதால் நீங்கள் உங்கள் குடும்பத்தை விரும்பவில்லை என்று அவர்களை உணர வைக்கும்”.
“மன அழுத்தம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும், ஒரு வெறுமையை நீங்கள் உணருவீர்கள்”.

ஊடகங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் மன அழுத்தத்தின் உண்மை நிலையை காட்டாமல் அதனை கற்பனை கலந்து காட்டுவதால் தான் இந்த பதிவை வெளியிட்டதாக ஜார்ஜியாவில் தனது ஆண் நண்பர் மற்றும் தாத்தா பாட்டியுடன் வாழும் கேட்டி, இதனை தெரிவித்தார்.

Source: BBC

Comments

comments

Related posts

Leave a Comment