10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவிலும் ரேங்க் முறை இல்லை… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

10ம் வகுப்பு பொதுத் தேர்விலும் ரேங்க் முறை ரத்து செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர். கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

12ம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு இரண்டிலும் ரேங்க் முறை இல்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

முதல் மூன்று இடத்தைப் பிடிக்கும் மாணவ மாணவியர்களின் பெயர்களைக் குறித்த பட்டியலும் வெளியிடப்படப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநில அளவில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்னும் 3 ஆண்டுகளில் 11ம் வகுப்பிற்கும் பொதுத் தேர்வு முறை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவிலான தேர்வுகளைக் கருத்தில் கொண்டுதான் 11ம் வகுப்பிற்கும் இன்னும் மூன்று ஆண்டுகளில் பொதுத் தேர்வு முறை நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ் வழிக் கல்வி பயின்ற மாணவ மாணவியர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் மற்றும் அரசு பள்ளிகளில் படித்து சிறந்த மதிப்பெண்களைப் பெறும் மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு பொதுத் தேர்விலும் இந்த முறையே பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பிலும் முதல் மூன்று இடத்தைப் பிடிக்கும் மாணவ மாணவியர்களின் பெயர்கள் அறிவிக்கப்படாது மற்றும் மாநில அளவில் ரேங்க் பட்டியலும் அறிவிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

comments

Related posts

Leave a Comment