யாழ் நெல்லியடி மத்திய கல்லூரியில் சிறப்பாக செயற்படும் “ஸ்மார்ட்” வகுப்பறை

கல்வியில் தனக்கென ஓர் பாரம்பரியத்தை பேணிவரும் கல்லூரியாக யாழ் நெல்லியடி மத்திய கல்லூரி விளங்குகின்றது. வடமராட்சியில் பல கல்விமான்களை உருவாக்கிய சாதனை இக் கல்லூரிக்கு உரித்தானது.

குடா நாட்டு பாடசாலைகளில் தொழில்நுட்பம் சார்ந்த புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் இக் கல்லூரி முன்னோடியாக விளங்குகின்றது. இக் கல்லூரியில் தற்போது அதிபராக கடமைபுரியும் திரு.கிருஷ்ணகுமார் அவர்களின் முயற்சிகள் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. இந் நிலையில் கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனுடன் கொண்டுசெல்லும் வகையில் பழைய மாணவரின் நிதி உதவியுடன் “ஸ்மார்ட்” வகுப்பறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பல்லூடக கருவிகள் பல கொண்டுள்ள இவ் வகுப்பறையில் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பல்லூடக ஒளித்தெறிப்பான் பொருத்தப்பட்டுள்ளது.

பாடசாலை நேரத்தில் மொத்த 8 பாடவேளைகளும் இவ் வகுப்பறையை பயன்படுத்தும் வகையில் நேரசூசி வடிவமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

கீழுள்ள காணொளியில் ஸ்மார்ட் வகுப்பறையின் தொழிற்பாடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Comments

comments

Related posts

Leave a Comment