கொழும்பில் அலங்கரிக்கப்புக்களைப் பார்த்து வியந்துள்ளார் இந்தியப் பிரதமர்

சர்வதேச வெசாக் தின நிகழ்வுகளில் பற்கேற்க இலங்கை சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கொழும்பில் அலங்கரிக்கப்புக்களைப் பார்த்து வியந்துள்ளார்.

இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றார். அதன் பின்னர், கங்காராம விகாரைக்கு விஜயம் செய்து அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த வெசாக் வலயத்தை திறந்து வைத்தனர்.

இந்நிலையில் அங்கே அலங்கரிக்கப்பட்டிருந்த அத்தனை கண் கவர் வர்ணங்களினாலான, விளக்குகள், வெளிச்ச வீடுகள் என்பனவற்றைப் பார்த்து வியந்துள்ளார்.

இதேவேளை, இந்த நிகழ்வினை முடித்துவிட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய விருந்துபசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

கொழும்பில் அவர் பார்த்து வியந்த சில புகைப்படங்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்து, தன்னுடைய வியப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.

Comments

comments

Related posts

Leave a Comment