இந்த வார ராசி பலன்கள் (12-05-2017 முதல் 18-07-2017 வரை)

கிரகங்களின் ராசி மாற்றம்

சூரியன் – 15ம் தேதி ரிஷபம் ராசிக்கு மாறுகிறார் செவ்வாய் – ராசி மாற்றம் இல்லை புதன் – ராசி மாற்றம் இல்லை குரு – ராசி மாற்றம் இல்லை சுக்கிரன் – ராசி மாற்றம் இல்லை சனி – ராசி மாற்றம் இல்லை ராகு- ராசி மாற்றம் இல்லை கேது – ராசி மாற்றம் இல்லை

மேஷம்

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் கலைஞர்களுக்கு மனக் கஷ்டம் உண்டாகும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் சமயோசிதமாக செயல்படுவீர்கள். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அயல் தேசத்திற்க்கு பயணம் செல்வீர்கள். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார். மன ஆசைகள் எல்லாம் நிறைவேறும்.

ரிஷபம்

சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகத்திற்க்காக அலைச்சல் அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் கோபம் அதிகரிக்கும். புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பண வசதி அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த காரியம் நடக்கும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மனதில் பாரம் அதிகரிக்கும். ராகு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் எல்லாம் சிறப்படையும். 13-05-2017அன்று இரவு 11-11 மணி முதல் 16-05-2017 அன்று பகல் 11-35 மணி வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.

மிதுனம்

சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார். நிலம் வீடு வகையில் முதலீடுகள் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வியாபார லாபம் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அசையாத சொத்துக்கள் வாங்குவீர்கள். சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்களில் வெற்றி கிடைக்கும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் சிறப்படையும். ராகு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூருக்கு பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள். 16-05-2017 அன்று பகல் 11-35 மணி முதல் 18-05-2017 அன்று இரவு 10-12 மணி வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.

கடகம்

சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் தாய் மாமனின் உதவி கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும். சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற வீண் பேச்சை தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை.. 18-05-2017 அன்று இரவு 10-12 மணி முதல் சுமார் இரண்டு நாட்கள் வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.

சிம்மம்

உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் மின் சாதனங்கள் தயாரிக்கும் தொழில் சிறப்படையும். புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தொழில் காரணமாக வெளிநாடு செல்லும் நிலை உண்டாகும். குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளால் மனக் கஷ்டம் உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சோம்பேறித்தனம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியடையும்.

கன்னி

சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளால் தொல்லை உண்டாகும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களால் நன்மை உண்டாகும். உங்கள் ராசிநாதன் புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கையில் பணப் புழக்கம் தாராளமாக இருக்கும். சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக விவசாய நிலம் வாங்குவீர்கள். ராகு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் வீண் அலைச்சல் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளால் தொல்லை உண்டாகும்.

துலாம்

சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகம் காரணமாக வெளியூர் செல்வீர்கள். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் நெருப்பு காயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தை தரும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் மகனால் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் தொல்லை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூருக்கு செல்வீர்கள். ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மன ஆசைகள் நிறைவேறும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள்.

விருச்சிகம்

சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் அப்பாவுடன் பிரச்சினை உண்டாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வீடு மனை நிலம் வியாபாரம் சம்பந்தப்பட்ட தொழில் சிறப்படையும். புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும். குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் பேச்சை தவிர்க்கவும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும்.

தனுசு

சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுடன் பிரச்சினை உண்டாகும். புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கல்வியில் மேன்மை உண்டாகும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் சொந்தத் தொழில் சிறப்படையும். சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டை அழகுபடுத்துவீர்கள். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் மந்தத் தன்மை உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்தில் வில்லங்கம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் பயணம் உண்டாகும்.

மகரம்

சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அரசு வாகன யோகம் உண்டாகும். செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடு வாங்குவீர்கள். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் கோயில் திருப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் இட மாற்றம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை கையாளும் பொழுது கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்ப குழப்பங்களை தவிர்க்கவும்.

கும்பம்

சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் தகவல் தொடர்பு சிறப்படையும். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு கட்டும் யோகம் உண்டாகும். புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் வந்து சேரும். குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராமல் பணம் கிடைக்கும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் முகத்தில் வசீகரம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியடையும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் தெளிவு உண்டாகும்.

மீனம்

சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பழைய கடங்கள் வசூலாகும். செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு மனை வாங்குவீர்கள். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் நகைச்சுவை அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் வெற்றியடையும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளை வெல்வீர்கள். கேது உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும்.

Comments

comments

Related posts

Leave a Comment