வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கா 59 ஆயிரம் வீட்டுத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்காக பிரேரிக்கப்பட்டுள்ள 59 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை செயற்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைக்க உயர் அதிகாரிகள் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்காக சீமெந்து கற்கள் மற்றும் சீமெந்து ஆகியவற்றை பயன்படுத்தி 59 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் பிரேரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு, கிழக்கில் 6 ஆயிரம் பொறுத்து வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்துக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Comments

comments

Related posts

Leave a Comment