ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சிங்கள இளம் பாடகரின் முடிவு!


சிங்கள மொழியில் பல பாடல்களுக்குச் சொந்தக்காரரான பிரபல இளம் சிங்களப் பாடகர் மொஹான் விக்கிரமசூரிய பௌத்த துறவியாகிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரத்தினபுரியைச் சேர்ந்தவர் மொஹான் விக்கிரமசூரிய. இவர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் பணிபுரிந்து வந்தவர். இசையில் பெரும் ஆர்வம் உள்ள இவர், சமீப காலமாக முழு நேரப் பாடகராக வலம் வந்துகொண்டிருந்தவர். இவரது பல பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மொஹான் பௌத்த துறவியாக மாறினார். கடவத்தை, வேபடவில் உள்ள ‘அரஹந்தக சமாதி ஆரண்ய’ என்ற பௌத்த மடாலயத்தில் இவர் துறவறம் ஏற்றுக்கொண்டார். சிறு வயது முதலே பௌத்த சமயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததாகவும், அதன் விளைவாகவே அவர் துறவறம் ஏற்றுக்கொண்டார் என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

துறவியாக மாறிய மொஹானின் தற்போதைய துறவறப் பெயர் ரத்னபுரே சித்தசத்தி தேரோ என்பதாகும்.

இச்செய்தி அறிந்த சிங்கள ரசிகர்கள் பலரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

Comments

comments

Related posts

Leave a Comment