இலங்கை கடற்பரப்பில் பாரியளவிலான திமிங்கலம் மீட்பு

வெலிகம, கும்புருகம கடல் பகுதியில் பாரிய அளவினை கொண்ட திமிங்கிலம் ஒன்றின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

கிட்டத்தட்ட 50 அடி அளவு நீளமாக இந்த திமிங்கிலம் நேற்று இரவு கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த திமிங்கிலத்தின் உடலில் பல இடங்களில் பெரிய அளவிலான வெட்டு காயங்கள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பெரிய படகு ஒன்றுடன் மோதுண்டமையினால் காயமடைந்து இந்த திமிங்கிலம் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

மிரிஸ்ஸ வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் குறித்த திமிங்கிலத்தை அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Comments

comments

Related posts

Leave a Comment