தி-நகருக்கு சொப்பிங் சென்று திரும்பி வந்த இலங்கை பெண் மரணம்

சென்னை பாரிமுனை பகுதியில் ஏற்பட்ட பாரிய வாகன விபத்தில் இலங்கை பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த பெண் பயணித்த கெப் ரக வாகம் ஒன்று 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

குடும்பத்தினருடன் சுற்றுலா பயணம் மேற்கொண்ட இலங்கை பெண் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

விபத்தில் கார் சாரதி உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த நால்வரும் ராஜிவ் காந்தி மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தி-நகருக்கு சொப்பிங் சென்று திரும்பி வந்த நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்துள்ளதுடன் தடுப்பு சுவர்களை உடைத்துக்கொண்டு குறித்த கார் 20 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது என பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த விபத்தில் 54 வயதான சித்தி ரித்வியா என்பவரே உயிரிழந்துள்ளார். அத்துடன், 34 வயதான மொஹமட் ஆசாத் ரபாட், மொஹமட் அஜ்மல் மற்றும் ஜிமா நஸாட் அம்ஜல் ஆகியோர் காயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், இவர்கள் மே 3 ஆம் திகதி இலங்கைக்கு திரும்பிசெல்லவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Related posts

Leave a Comment