யாரம்மா கட்டிலில? – அவரா… எலக்ரீசியன்… சும்மா சுத்திபார்க்க வந்திருகிறார் அப்பா..!

வீட்டில் உள்ள உற்றார் உறவினர்கள், நண்பர்களுடன் கலந்துரையாட பயன்படும் வலை கமெரா (Web camera) மூலம், சிலரது உண்மை முகங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன.

வெளி உலகத்திற்கு தங்களை நல்லவர்களாக சித்தரித்துக்கொண்டாலும், இவர்களின் போலியான முகத்தினை கமெரா எவ்வாறு பிரதிபலிக்கிறதோ, அதே போன்று தான் இவர்கள் செய்த உண்மையான தவறுகளை பிரதிபலித்துகாட்டி விடுகிறது இந்த வலை கமரொ.

அதற்கு உதாரணமான சம்பவம் இதோ, விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி ஒருவர், தனது வீட்டில் உள்ள பெற்றோர்களுடன் வலை கமெரா மூலம் அன்றாடம் உரையாடி வந்துள்ளார்.

தனது நலம் மற்றும் குறைகளை பெற்றோருடன் பகிர்ந்துகொள்ளும் அவர், வீட்டின் நிலமையையும் அறிந்துகொள்வார்.

இதே போன்று ஒரு நாள் தனது பெற்றோருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, இவருக்கு தாகம் ஏற்படவே எழுந்து தண்ணீர் குடிக்க சென்றுள்ளார்.

அப்போது, வலை கமெரா தற்செயலாக வேறுபக்கம் திரும்பியுள்ளது. அப்போது இந்த பெண்ணின் கட்டிலில் ஆண் நபர் ஒருவர் படுத்திருந்தை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத அப்பெண், வேகமாக ஓடிவந்து கமெரா முன் அமர்ந்து கொண்டு தனது பெற்றோரை சமாதானப்படுத்தியுள்ளார்.

ஆனால், பெற்றோரா, அவன் யார்? எனது விசாரணை வேட்டையை மகளிடம் நடத்தியுள்ளனர். மகளோ அவன் எலக்ட்ரீசியன் என முன்னுக்கு பின் முரணமாக பதிலளித்துள்ளார்.

மகளின் பதிலால் சந்தேகம் அடைந்த பெற்றோர், மகளிடம் அவள் தங்கியிருக்கும் விடுதியின் முகவரியை கேட்டறிந்து சென்றபோது, அங்கு அப்படி ஒரு விடுதியே இல்லை என்பதை அறிந்த அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இறுதியில், தனது மகள் முறையான விடுதியில் தங்கி படிக்காமல், ஆண் மகன் ஒருவனோடு சேர்ந்து ஒரே அறையில் தங்கியிருப்பதும், அவனோடு சேர்ந்து சுற்றித்திரிந்ததையும் கேள்விபட்ட பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தற்போது, தங்களது மகள் எங்கு இருக்கிறாள் என்பதை அறியாத பெற்றோர், இது தொடர்பாக பொலிசில் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் கல்வி கற்கிறேன் என்று கூறி இத்தனை மாதங்களாய் நம்மை ஏமாற்றி வந்துவிட்டாளே பெற்றோர் நொந்துகொண்டனர்.

Comments

comments

Related posts

Leave a Comment