இலங்கையில் கணவனின் ஆணுறுப்பை வெட்டி கொலை செய்த மனைவி

தெல்கொடை, மீகஹவத்தை அக்குறுமுல்ல பிரதேசத்தில் பெண்ணொருவர் தனது கணவனை கொடூரமாக கொலை செய்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் 29 வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். மனைவி இந்த நபரின் பிறப்புறுப்பை அறுத்து கொலை செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

கொலை செய்யப்பட்ட நபர் ஏற்கனவே திருமணம் செய்து அவருக்கு மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் குறித்த நபருக்கு இரண்டாவது திருமணம் நடந்துள்ளது. குறித்த இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் குறித்த பெண் கணவனை கத்தியால் குத்தி விட்டு பிறப்புறுப்பையும் அறுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது கணவனை கொலை செய்த பெண் கத்தியுடன் மீகஹவத்தை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

கொல்லப்பட்ட கணவன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால், இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது கணவன் தன்னை கொலை செய்ய போவதாக கூறி ஏற்பட்ட சண்டையில் தான் கணவனை கொலை செய்து விட்டதாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

வீட்டு வரவேற்பறையில் இந்த கத்தி குத்து சம்பவம் நடந்துள்ளதுடன் கத்தி குத்துக்கு இலக்கான நபர் இரத்தத்தை சிந்தியவாறு வாசலுக்கு ஓடியுள்ளார்.

வீட்டு முற்றத்தில் இருந்து மீட்கப்பட்ட சடலத்தில் 10 கத்தி குத்து காயங்கள் இருப்பதாகவும் ஆணின் பிறப்புறுப்பு சடலத்திற்கு அருகில் கிடந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து மீகஹவத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

comments

Related posts

Leave a Comment