மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் மீது தாக்குதல் முயற்சி: பட்டதாரிகள் கவலை

சத்தியாக்கிரக போராட்டம் நடாத்திவரும் பட்டதாரிகள் மீது இரவு வேளையில் தாக்குதல் நடாத்த சிலர் முற்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மதுபோதையில் வந்து இருவர் நேற்று இரவு தகாத வார்த்தைகளினால் திட்டிவிட்டு தாக்குவோம் என கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றதாகவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தமது போராட்டத்திற்கு நியாயமான தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியாத சில அரசியல்வாதிகள் தங்களது அடிவருடிகள் மூலம் அச்சுறுத்தல் விடுப்பதாக பட்டதாரிகள் கூறியுள்ளனர்.

அத்துடன், தங்களுக்கான தொழில் உரிமையினை வழங்குமாறு மத்திய மாகாண அரசாங்கங்களை வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 56 ஆவது நாளாக இன்று(17) சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அருட்சகோதரிகள் இந்த சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

Comments

comments

Related posts

Leave a Comment